Tuesday, February 19, 2013

பேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது!


facebookFacebook இன் 2.5 லட்சம் முதல் 2 கோடி அக்கவுண்ட் வரை hack செய்யபட்டிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் டிவிட்டர் hackசெய்யபட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போது Facebook அக்கவுண்ட்கள் hack செய்யப்பட்டுள்ளன. நேற்று மதியம் இந்த தகவல் வெளியான உடன் அதன் ஸ்டாக் விலை கீழே இறங்க தொடங்கியது.
தகவல்கள் அழியவில்லை
இந்த முறை ஃபேஸ்புக் ஹாக் செய்த விதம் மிக புதுமையானது. ஃபேஸ்புக் பணியாளர்கள் ஒரு மொபைல் சைட் டெவலப்பர் அலுவலகத்துக்கு சென்ற போது தன்னுடைய மடிக்கணனியும் எடுத்து சென்றுள்ளனர். அங்கு அதில் இந்த மால்வேர் உபயோகபடுத்தியிருக்கின்றனர்.
அதன் மூலம் அலுவலகம் முழுவதும் பரவி இந்த வைரஸ் ஃபேஸ்புக்கின் சர்வரிலே இறங்கியுள்ளது. இதன்மூலம் அனைத்து கஸ்டமர்களின் தகவல்களை மட்டும் எடுத்திருக்கின்றனர் மற்றபடி தகவல்கள் அழிக்கபடவில்லை. இது ஒரு சீனா நிறுவனத்தின் வேலையாக இருக்கும் என ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஃபேஸ்புக் கை ஏற்கனவே ஹோம்லான்ட் செக்யூரிட்டி போன முறை ஜாவா அப்டேட் அலர்ட் வந்ததை சந்தேகத்துடன் பார்த்தால் ஜாவா அப்டேட்டை டிஸேபிள் செய்யுமாறு அறிவுறுத்தியது. ஏனெனில் ஜாவா அப்டேட் மாதிரி ஹாக்கர்கள் டிஸைன் செய்து மால்வேரை நிறுவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவனம் தேவை
முதலில் கடினமான பாஸ்வோர்டை மாற்றுங்கள். உங்களின் அக்கவுண்டில் ஏதாவது வங்கி எண் அல்லது கிரெடிட் கார்ட் தகவல்கள் பதிந்து இருந்தால் அல்லது சாட்டில் அறிவித்திருந்தால் எடுத்து விடவும். வாய்ஸ் மெயில் அத்தனையும் அழித்துவிடுவது நல்லது. லொகேஷன் லாகின் அலெர்ட்டை எனேபிள் செய்தால் வேறு யாராவது உங்கள் அக்கவுன்டில் கை வைத்திருந்தால் உடனே உங்களுக்கு தெரிய வரும். இதன் மூலம் உங்கள் ஈமெயில் அக்கவுண்ட் ஹாக் செய்யப்படலாம் அதனால் ஃபேஸ்புக்குக்கு உபயோகப்படுத்தும் ஈமெயிலின் பாஸ்வோர்டையும் மாற்றவும். இதன்மூலம் உங்களுடைய தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment