Saturday, February 9, 2013

விண்டோஸ் 7 மற்றும் 8 யில் ISO இமேஜ் கோப்பை மவுண்ட் (Mount) அமைத்தல்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும்,  ISO இமேஜ் கோப்பை மவுண்ட் செய்வதற்கான உபயோகம் விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா வில் வேலை செய்வது இல்லை. அதற்காக Virtual Clone Drive யை பயன்படுத்தி இலகுவாக  ISO இமேஜ் கோப்பை மவுண்ட் செய்து கொள்ளலாம்.   அதோடு ISO, .CCD, .DVD, .IMG, .UDF, .BIN கோப்புக்களையும் மவுண்ட் செய்து கொள்ளலாம். முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி,  ISO இமேஜ் யை மவுண்ட் செய்ய தேவையான செய்கையினை ஆரம்பியுங்கள்.   


தரவிறக்கிய பின்னர் வழமையான நிறுவுதல் முறை மூலம்  Virtual Clone Drive மென்பொருளை கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள். அதன் பின்னர் கணணியை Re-Start செய்யுங்கள், பின்னர் நீங்கள் எந்த ISO கோப்பிலும் இரு முறை கிளிக் (Double Click ) செய்வதன் மூலம் DVD இமேஜ் ஆக மவுண்ட் பண்ணிக்கொள்ளலாம். அது மட்டுமன்றி  CD-ROM டிரைவ் வில் ரைட் கிளிக் செய்து குறித்த கோப்பை கூட இமேஜ் ஆக மவுண்ட் அல்லது unmount செய்துகொள்ளலாம்.     
     
ISO கோப்பை DVD  இமேஜ் ஆக மவுண்ட் பண்ண பயன்படுத்தும் வேறு வகை மென்பொருள் பட்டியல் 

Virtual CD -ROM (Microsoft)  - இது விண்டோஸ் விஸ்டாவில் வேலை செய்யாது
Alcohol 52%
Daemon Tools 
மேலே குறிப்பிட்ட அனைத்து மென்பொருட்களை விட Virtual Clone Drive சிறந்தது.
விண்டோஸ் 8 யில் ISO இமேஜ் மவுண்ட் அமைத்தல் 
விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்திலேயே VHD மற்றும் மவுண்ட் அமைப்பதற்க்கான வசதி உள்ளது. நீங்கள் மவுண்ட் அமைக்க விரும்பும் கோப்பின் மேல் இருமுறை கிளிக் செய்தோ அல்லது அதன் மேல் ரைட் கிளிக் செய்தோ ISO இமேஜ் கோப்பாக மாற்றலாம். 


ISO கோப்பை மவுண்ட் செய்து முடிந்ததும் உங்கள் கணணியில் உள்ள  புதிய டிரைவ் வாக காணப்படும்.  

No comments:

Post a Comment