Wednesday, February 13, 2013

கணணி பூட் செய்யாத வேளை விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டை பயன்படுத்தி கோப்புக்களை பேக்கப் எடுத்தல்

உங்களது கணணி திடீர் என பூட் செய்யாத வேளை விண்டோஸில் உள்ள உங்களது முக்கிய  கோப்புக்களை மீள பெறுவது கடினமான விடயமாக இருக்கும். இந்த இக்கட்டான நேரங்களில் விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டை பயன்படுத்தி கோப்புக்களை இலகுவாக மீட்டுக்கொள்ள முடியும். இந்த பதிவில் காட்டப்படும் செய்முறைகள் விண்டோஸ் 7 மற்றும் 8 ஒபெரடிங் சிஸ்டம் இரண்டிற்கும் பொருந்தும்.உதாரணமாக நீங்கள் விண்டோஸ் 7 நிறுவுதல் இறுவட்டை பயன்படுத்தி விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள கோப்புக்களை பேக்கப் செய்து மீள பெற்றுக்கொள்ள முடியும். 
விண்டோஸ் நிறுவல் இறுவட்டில் இருந்து பூட் செய்தல்  
முதலில் விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டை கணணியில் செருகி (Insert) பின்னர் கணணியை ரிஸ்டார்ட் (Restart) செய்யுங்கள். எல்லாம் சரியாக வேலை செய்தால் "Press any key to boot from CD or DVD" என்ற தகவலை காண்பீர்கள். உடனடியாக கிபோர்ட்டில் உள்ள ஏதாவது ஒரு கியை அழுத்தி விண்டோஸ் நிறுவலை தொடருங்கள். 

பின்னர் "Next" தெரிவை கிளிக் செய்து அதில் "Repair your computer" என்பதை தெரிவு செய்யுங்கள்.
நீங்கள் விண்டோஸ் 8 நிறுவுதல் இறுவட்டை பயன்படுத்தினால் "Troubleshoot > Advanced Options > Comment Prompt" என்ற இடத்திற்கு செல்லுங்கள்.
நீங்கள் விண்டோஸ் 7 நிறுவல் இறுவட்டை பயபடுத்தினால் "Restore your computer using a system image you created earlier" என்ற தெரிவை தெரிவு செய்து. பின்னர் தொடர்ந்து கிளிக் "Next" , கிளிக் "Cancel", கிளிக் "Cancel" என அழுத்தி செய்முறையை தொடருங்கள். 
அதை தொடர்ந்து நீங்கள் System Recovery Option திரையை காண்பீர்கள், அதில் Comment Prompt திரையை திறப்பதற்க்காக "Comment Prompt " தெரிவை அழுத்துங்கள்.

Comment Prompt விண்டோ திறந்த பின்னர், அங்கே "Notepad " என குறியுங்கள். அதை தொடர்ந்து Notepad திரை அங்கே திறக்கும், அதில் "File" யை கிளிக் செய்து அங்கே "Open" என்பதை தெரிவு செய்யுங்கள்.
பின்னர் திறக்கும் விண்டோவில் கிழே உள்ள Files of type என்ற படிவத்தில் "All Files" தெரிவு செய்து, இடது பக்கம் உள்ள "Computer " தெரிவை அழுத்துங்கள். 
பின்னர் உங்களது கணணியில் USB டிரைவ்வோ அல்லது நிலைவட்டோ (Hard Disk) பொருத்தி இருந்தால் நீங்கள் மீட்க வேண்டிய கோப்புக்களை அங்கே "Copy & Paste " செய்து கொள்ளுங்கள்.

தயவுசெய்து மீட்க வேண்டிய கோப்புக்களின் மீது இரு முறை கிளிக் செய்யாதீர்கள், அவ்வாறு செய்தால் Notepad செயலிழந்துவிடும். இப்படி ஏதாவது நடந்தால் மறுபடியும் Comment Prompt விண்டோவிற்கு சென்று பின்னர், அங்கே "taskmgr " என குறியுங்கள். அதை தொடர்ந்து Task Manager விண்டோ திறக்கும், அதில் செயலிழந்த Notepad யை End Task கொடுத்து மீண்டும் Notepad யை பழையபடி திறந்து கொள்ளுங்கள்.   

இப்பொழுது மீட்க வேண்டிய கோப்புகளை மீள நிலைவட்டில் சேமித்து முடித்தால், விண்டோஸை மூடிவிட்டு பின்னர் கணணியை நிறுத்தி (Shutdown)விடுங்கள். இனி விண்டோஸ் 7 அல்லது 8 ஒபெரடிங் சிஸ்டத்தை புதிதாக கணணியில் அதே இறுவட்டை பயன்படுத்தி நிறுவிக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment