Wednesday, February 6, 2013

கணணியில் Virtual PC யை பயன்படுத்தி விண்டோஸ் 7 நிறுவுதல்-2



கணணியில் Virtual PC யை பயன்படுத்தி விண்டோஸ் 7 நிறுவுதல் -01 தொடர்ச்சியாக, இந்த பதிவில் நாங்கள் விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டத்தை எவ்வாறு Virtual Machine னுள் நிறுவது என்று பார்ப்போம். ஆரம்பமாக நீங்கள் மீண்டும் Virtual PC க்கு செல்லவேண்டும். அங்கே நீங்கள் உருவாக்கிய புதிய Virtual Machine யை காணலாம்.
பின்னர் அதில் ரைட் கிளிக் செய்து Settings யை தெரிவுசெய்ய வேண்டும்.




அடுத்துவரும் Settings திரையில் நீங்கள் உருவாக்கிய புதிய virtual machine யில் நிறுவவேண்டிய புதிய ஒபெரடிங் சிஸ்டம் நிறுவுதளுக்குரிய இறுவட்டு (Installation disk) எங்கே உள்ளது என்று தெரிவிக்க வேண்டும்.அதற்கு Settings திரையில் இடது பக்கமாக உள்ள "DVD Drive" என்பதை தெரிவுசெய்க.


பின்னர் அங்கே உள்ள ISO image கோப்பாக (Fileகாணப்படும் விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டத்தை  தெரிவு செய்து, கிழே உள்ள "OK" என்ற பொத்தானை அழுத்தி நிறுவ வேண்டிய ஒபெரடிங் சிஸ்டத்தை Virtual machine யில் நிறுவிக்கொள்ளுங்கள்.


கணணியில் Virtual ஒபெரடிங் சிஸ்டத்தை உருவாக்குவதற்கு, Virtual machine யை ஆரம்பித்து, வழமையான நிறுவுதல் படி முறைகளை தொடருங்கள்.




முதல் செய்முறையாக உங்களது நிறுவுதலை தெரிவுசெய்த பின்பு, இரு தடவை (Double Click) கேசறை Virtual machine யின் மேல் அழுத்துங்கள். அதை தொடர்ந்து கணணி  தானாகவே நிறுவுதல் வேலையை ஆரம்பித்து நிறுவுதலுக்கு தேவையான கோப்புக்களையும் நகல் எடுத்து கணணியில் ஏற்றிக்கொள்ளும்.


நிறுவுதல் கோப்புக்களை ஏற்றிய பிற்பாடு, முதல் படிமுறையாக மொழி விருப்புக்களை (Language options) கட்டமைக்க (configure) வேண்டும்.


எப்போழுது நீங்கள் கேசறை virtual machine திரையில் அழுத்தும் பொழுது, உங்களுடைய Mouse virtual machine ஆள் கைப்பற்றப்பட்டதாக (captured) உங்களுக்கு தெரியபடுத்தும். அதோடு மட்டும் இல்லாது operating system த்தில் இருந்து இப்படி மீள கேசறை வெளியே எடுப்பது என்றும் அது காட்டும்.


இப்பொழுது நீங்கள் "Install now" என்பதை அழுத்துக.


அடுத்து,  Custom installation செய்வதா அல்லது upgrade செய்வதா என்பதை நீங்கள் உங்களுக்கு ஏற்றால் போல் தெரிவு செய்துகொள்ளவேண்டும். முதல் நிறுவிய ஒபெரடிங் சிஸ்டம் உங்களுக்கு தேவை இல்லை என்றால் நீங்கள் Custom installation  என்பதை தெரிவு செய்யலாம். 
அடுத்து, நிறுவும் ஒபெரடிங் சிஸ்டத்தை எந்த டிரைவில் நிறுவவேண்டும் என்பதை தெரிவுசெய்து கொள்ளுங்கள். "Advanced configuration settings" உங்களுக்கு தேவை என்றால் "Drive options" யை தெரிவு செய்து கொள்ளுங்கள். 


"Drive options" மெனுவை கிளிக் செய்வதன் மூலம் குறித்த டிரைவ்யை வடிமைக்கலாம் (Format), புதிய பகிர்தலை (Partition) உருவாக்குதல் அல்லது நீக்குதல் வேலைகளை செய்யாலாம், பகிர்தல் (Partitionஅளவை மாற்றிக்கொள்ளலாம் போன்ற பல வசதிகளை காணலாம். அதில் உங்களுக்கு தேவையானதை தெரிவுசெய்து ஒபெரடிங் சிஸ்டத்தை குறித்த டிரைவ்வில் நிறுவிக்கொள்ளுங்கள்.


பின்னர் நீங்கள் "Next" பொத்தானை அழுத்தியதும் விண்டோஸ் 7 நிறுவுதல் தொழிற்பாடு ஆரம்பித்துவிடும்.


நிறுவல் தொழிற்பாடு முடிந்த பிறகு, உங்களுடைய virtual machine முதல் முறையாக ஆரம்பித்துவிடும்.


விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டம் கணணியில் ஏற்றப்பட்டதன் பிற்பாடு, நீங்கள் திரையின் மேலே ஒரு Tools டப்யை காணுவீர்கள். அந்த "Tools"  யை தெரிவுசெய்து "Install Integration Components" என்பதை அழுத்துங்கள்.


கிழே படத்தில் காட்டப்பட்டவாறு அது உங்களிடம் Integration Components யை நிறுவச்சொல்லி கேட்கும்.


நீங்கள் "Continue" பொத்தானை அழுத்தியதும் திரையில் virtual DVD drive திறக்கும், அதில் "Run the setup file" என்பதை தெரிவுசெய்க.


அதை தொடர்ந்து Integration Components wizard திரையில் தோன்றும், தொடர்ந்து அது virtual machine உடனும் உங்களது ஒபெரடிங் சிஸ்டத்திடனும் ஒருங்கினைந்துவிடும்.



கிழே உள்ள படத்தில் நீங்கள் integration components நிறுவப்படுவதை பார்ப்பீர்கள். Virtual pc உங்களது devices களை அடையாளம் கண்டுகொள்ளும், அதனுடன் சேர்த்து தேவையான drivers யையும் நிறுவிக்கொள்ளும்.


தொடர்ந்து அது உங்களது கணணியை மீள் ஆரம்பிக்கச்சொல்லி கேட்கும். நீங்கள் Yes என்பதை அழுத்தி தொடர விடுங்கள்.


கணணி மீள ஆரம்பித்த பிறகு Integration Components தானாக இது அக்டிவே ஆகாது. அதையும் நீங்கள் தான் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் Tools டப்க்கு சென்று அங்கு "Enable Integration Features" யை கொடுங்கள்.


அதன் பிறகு நீங்கள் திரையில் புதிய USB menu டப்பில் ஒபெரடிங் சிஸ்டத்தில் சகல devices களும் இணைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.


அதோடு நீங்கள் Full Screen option யையும் திரையில் காணலாம்.


முடிந்தது, நீங்கள் Virtual PC யை பயன்படுத்தி விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டத்தை Virtual Machine யில் நிறுவி விட்டீர்கள். இதை நீங்கள் செய்து பாருங்கள் கணணியில் புதிய அனுபவம் கிடைக்கும். 

நன்றி 


courtesy:e-techtamil

No comments:

Post a Comment