Wednesday, January 9, 2013

ஸ்மார்ட்போன்களுக்கு உபுண்டு இயங்குதளம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0I9QzGMsQchSzAjf_wYXFP1F0GCL5JYr38dcJRN50qj20KQvtbgBpm1CKixVXm0BU4AVwY_vSLi6Mxy83QqDNSQ6LTxiBhvdmLT0HYWKQb-ewfbVml5vRFgovUvTrk2L9ExTUvhnUPQ/s1600/Ubuntu+mobile+os.jpg                   ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் செயல்படக்கூடிய உபுண்டு இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது. லினக்ஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்டு இயங்குதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், ஸ்மார்ட்போன்கள் முழுமையான கணினி போல செயல்படும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படக்கூடிய ஸ்மார்ட்போன்களை, மிக எளிதாக உபுண்டு இயங்குதளத்துக்கு மாற்ற முடியும் என்று இந்த இயங்குதளத்தை வெளியிட்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த கனோனிகல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நெக்சஸ் போன்களில் இந்த இயங்குதளம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உலகம் முழுவதும் 2 கோடி கணினிகளில் உபுண்டு இயங்குதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைரஸ் தாக்குதல்கள் இல்லாததது இந்த இயங்குதளத்தின் சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment